2025 மே 19, திங்கட்கிழமை

“நாவலர் கோட்டம்”...

Editorial   / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மந்துவில் பகுதியில் அமைக்கப்பட்ட  “நாவலர் கோட்டம்” எனும் மாதிரிக் கிராமம் இன்று (07) மக்களிடம் கையளிக்கப்பட்டது.

13 ஆவது மாதிரிக் கிராமமாக அமைக்கப்பட்டுள்ள மேற்படி மாதிரிக் கிராம வீடுகளை, அமைச்சர் சஜித் பிரேமதாஸ பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பொதுமக்களிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். 

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன்  மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த வீட்டுத் திட்டத்தில் புதிதாக 29 வீடுகளுக்கான உரிமைப் பத்திரம் வழங்கப்பட்டன. அதேபோன்று அபிவிருத்தி செய்யப்பட்ட 29 காணித்துண்டுகள் 1.8 மில்லியன் ரூபாய் செலவில் வழங்கப்பட்டன.

மேலும், 700 பயனாளிகளில் 490 பேருக்கு 24.5 மில்லியன் ரூபாய் வீடமைப்பு கடன்களுக்கான காசோசலைகள் வழங்கப்பட்டன. 

அத்துடன், 15 பயனாளிகளுக்கு “சொந்துருபியச” கடன்களுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.  இது 3 மில்லியன் ரூபாய் செலவில் வழங்கப்பட்டது.

இதேவேளை, 79 பேருக்கு மூக்கு கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X