2025 ஜூலை 23, புதன்கிழமை

நினைவேந்தல்…

Editorial   / 2017 ஒக்டோபர் 10 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த தமிழ் இளைஞர்கள் 7 பேரின் 15ஆவது நினைவேந்தலும் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு அவர்களதும் 12ஆவது நினைவேந்தவலும், உலக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் ஆ.ஜேன்சனின் தலைமையில், திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் முன்பாகவுள்ள நினைவுத் தூபியில் நேற்று (09) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

பிரதான சுடர் அதிதிகளால் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இளைஞர்களின் சமாதிக்கு, பெற்றோர்களும் உறவினர்களும் மலர்மாலை அணிவித்து,  தமது அஞ்சலி செலுத்தினர்.

மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் சமாதிக்கு, அவரது மனைவி மாலை அணிவித்து  அஞ்சலி செலுத்தினர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், உலக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஆலோசகர் தம்பையா யோகேஸ்வரன், ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் ஆ.ஜோன்சன், ஒன்றியத்தின் மட்டு/அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஆர்.ஆர்.டிஸ்கரன், முன்னாள் போராளிகள் ஆகியோரும் கலந்துகொண்டு தமது அஞ்சலி உரைகளை ஆற்றினர்.

(படப்பிடிப்பு: எஸ்.கார்த்திகேசு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .