2025 மே 19, திங்கட்கிழமை

நியமனம்...

Editorial   / 2018 நவம்பர் 10 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல், எப்.முபாரக்

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று (09) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று(10)  தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார்.

புதிய அமைச்சரவை நியமனத்தின்போது நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ஹிஸ்புல்லாஹ் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விசேட வேண்டுகோளுக்கு அமைய, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பொறுப்பொன்று கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X