2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

நியமனம்…

Ilango Bharathy   / 2021 ஜூன் 02 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவா ஸ்ரீதரராவ்

சப்ரகமுவ மாகாண சபை அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் மற்றும் ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதம் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவினால் சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத்தொகுதியில் வைத்து இன்று(2) கையளிக்கப்பட்டது.

இதன்படி சப்ரகமுவ மாகாண சபையின் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக எச்.டி.சிசிர மற்றும்  சப்ரகமுவ மாகாண சமூக சேவைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, கிராமிய கைத்தொழில், கிராமிய அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராக  ஏ.எஸ்.ஜீ.கொடல்லவத்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு சப்ரகமுவ மாகாண காணி அமைச்சின் ஆணையாளராக திலினி தர்மதாசவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் ரஞ்ஜனி ஜயகொடி,  மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் பிரபாத் உதாகர, ஆளுநரின் இணைப்புச் செயலாளர் மஞ்சுளா இதிகாவெல ஆகியோர் கலந்து கொண்டனர்.





 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X