2025 மே 14, புதன்கிழமை

நீச்சல் தடாகமாகின பரீட்சை நிலையங்கள்

Editorial   / 2022 மே 24 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின், ஹிரான் பிரியங்கர ஜயசிங்ஹ

நாடளாவிய ரீதியில் கல்விப்பொதுத் தராதர பரீட்சைகள் நடைபெற்று வருகின்ற நிலையில்,  சில மாவட்டங்களில் சீரற்ற வானிலை நிலவி வருகின்றது.

அந்தவகையில், புத்தளம் மாவட்டத்தில் பெய்த அடைமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால் தாழ்நிலங்கள் நிரம்பின. பரீட்சை மத்திய நிலையங்களின் அண்மித்த பிரதேசங்கள்,  செல்லும் வழிகள் வெள்ள நீரில் மூழ்கின.

அதாவது,  நீச்சல் தடாகம் போல காட்சியளித்தன. எனினும்,  பரீட்சார்த்திகளை பரீட்சை மண்டபங்களுக்கு தங்களுடைய பஸ்களில் ஏற்றிவந்த இலங்கை இராணுவம்,  வெள்ளத்தில் இருந்து பரீட்சை மத்திய நிலையங்களுக்குச் செல்வதற்கு  கதிரைகளை பாலமாக போட்டது.

புத்தளம் மாவட்டத்தில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட பரீட்சை மத்திய நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X