2025 ஜூலை 30, புதன்கிழமை

நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

R.Tharaniya   / 2025 ஜூலை 28 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருப்பு ஜூலைபேரவலத்தை நினைவுகூர்ந்து மற்றும் செம்மணி புதைகுழி க்கும் வடக்குகிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கு நீதி வேண்டியும் இவைகள் மீளநிகழாமையை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தினால்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்ற இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டகிறிஸ்தவ ஒன்றியத்தின் அருட்தந்தையர்கள், மட்டக்களப்பு மாவட்டவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் மற்றும் சிவில்சமூகஆர்வலர்கள் எனபலரும்கலந்துகொண்டனர்.

இதன்போது கருப்பு ஜூலைஸ்ரீலங்கா அரசபயங்கரவாதத்தின் கொடூரம், செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை வேண்டும், தமிழர்தாயகத்தில் இலங்கைஅரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட மனிதபுதைகுழிகளுக்கு சர்வதேச நீதிவேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டும் என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச நீதி பொறிமுறையின் கீழ்வடகிழக்கில் நடந்தஇனப்படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும்இதன்போது வலியுறுத்தப்பட்டது.

வால கிருஸ்ணா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .