Janu / 2023 ஜூன் 21 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவில் மிகவும் பழமைவாய்ந்த நுவரெலியா பிரதான தபாலக கட்டிடத்தை சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் தொழிற்சங்க ஊழியர்களும் நுவரெலியா வைத்தியசாலை வைத்தியர்களும் பொது மக்களும் இணைந்து நேற்று (21) புதன்கிழமை நன்பகல் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நுவரெலியாவில் நடத்தினார்கள்.
நுவரெலியா பிரதான தபாலகத்திற்கு முன்னால் ஆரம்பித்த எதிர்ப்பு பேரணி நுவரெலியா எலிசபெத் மகாராணி வீதி, லோசன் வீதி, உடபுஸல்லாவ வீதி வழியாக நுவரெலியா மாவட்ட செயலகம் சென்று தங்களது எதிர்ப்பு கோரிக்கை அடங்கிய மகஜீர் ஒன்றை நுவரெலியா மாவட்ட மேலதிக செயலாளரான திருமதி போதிமானவிடம் கையளித்தனர்.
அதனை தொடர்ந்து எதிர்ப்பு பேரணி நுவரெலியா புதிய கடை வீதி வழியாக மீண்டும் நுவரெலியா பிரதான தபாலகம் அருகில் சென்று தங்களது எதிர்ப்பு போராட்டத்திற் கான கருத்துகளை தபால் தொழிற்சங்க தலைவர்களும் மத குருமார்களும் போராட்டத்தி கலந்துக்கொண்டவர்களுக்கு தெழிவுபடுத்திய பின் எதிர்ப்பு கூட்டம் கலைந்து சென்றது.
போராட்டம் நடைபெற்ற பொழுது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாதவண்ணம் நுவரெலியா பொலிஸார் பாதுகாப்பு வழங்கியதும் குறிப்பிடதக்கது.
டி.சந்ரு , செ.திவாகரன்,எஸ். கே. குமார்





24 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
3 hours ago
3 hours ago