2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

போக்குவரத்து பாதிப்பு

Niroshini   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், மு.இராமசந்திரன்

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையினால் ஹட்டன் - நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் காசல்ரீ நீர்தேக்க பகுதியில் இன்று மதியம் 1.45 மணியளவில் பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரம் சரிந்து விழுந்ததால் மின் கம்பியும் அறுந்து விழுந்ததன் காரணமாக அப்பிரதேசத்துக்கான மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், மரத்தை வெட்டி அகற்றுவதற்கு தற்பொழுது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

போக்குவரத்து தடைப்பட்டுள்ளதன் காரணமாக லக்ஷபான மற்றும் நோட்டன்பிரிட்ஜ் செல்லும் வாகனங்கள் பல சிரமங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடதக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .