2025 மே 24, சனிக்கிழமை

பெண்களின் பேரணி

Suganthini Ratnam   / 2017 மார்ச் 01 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 'பெண்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வோம்;' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் பெண்களின் பேரணி இன்று (01) நடைபெற்றது.  

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் மாவட்டச்  செயலகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேரணியானது, காந்தி பூங்காவிலிருந்து ஆரம்பமாகி மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள டோபா மண்டபம்வரை சென்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு குரல் கொடுக்க வேண்டும் எனவும் உள்ளூராட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 25 சதவீத பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாவட்டச் செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆரம்பித்துவைத்த இந்தப் பேரணியில்  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூகசேவை உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X