2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

புத்தர் சிலை திறந்து வைப்பு...

Princiya Dixci   / 2017 மே 05 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் மாகாண சபை கட்டட வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (05) திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் ஆரம்ப பூஜை மற்றும் சமயக் கிரியைகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி, மகா சங்கத்தினர் நூறு பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

ருவன்வெலிசேய விகாராதிபதி சங்கைக்குரிய பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க சந்திராணி பண்டார, பீ.ஹரிஷன், வடமத்திய மாகாண ஆளுநர் பீ.பி.திசாநாயக்க மற்றும் முதலமைச்சர் பேசல ஜயரட்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .