Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
1. உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவுக்கு விஜயம் செய்தார். கடந்த 4ஆம் திகதியன்று புதுடெல்லி விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமர் தலைமையிலான குழுவினரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகளர் வை.கே. சின்ஹா, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாஹீஸ்வர ஆகியோர் வரவேற்றனர்.
2. இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் கடந்த 5ஆம் திகதியன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
3. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை, கடந்த 5ஆம் திகதியன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
4.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த 5ஆம் திகதியன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், பகல் போசனத்திலும் இணைந்துகொண்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஹைதராபாத் மாளிகையில், விசேட விருந்தினர்களுக்கான புத்தகத்தில் கையொப்பமிட்டார்.
5. இந்திய போக்குவரத்து, அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் கடற்துறை அமைச்சர் நித்தின் கத்காரியுடன் 5ஆம் திகதியன்று சந்தித்துப் பேச்சுவார்தை நடத்தினர்.
6. இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் 5ஆம் திகதியன்றே சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
7. இந்திய கனியவள மற்றும் இயற்கை காஸ் தொடர்பிலான அமைச்சர் தர்மேந்திர பிடானையும் 5ஆம் திகதியன்றே சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
8. இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 5ஆம் திகதியன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
25 minute ago
32 minute ago
34 minute ago