Editorial / 2026 ஏப்ரல் 27 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் 'Ofqual' ஒழுங்குமுறை அங்கீகாரம் பெற்ற சர்வதேச விருதளிப்பு அமைப்பான 'Gatehouse Awards UK' மற்றும் 'Ceylon College of Applied Studies' (CCAS Campus) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 8வது ஆண்டு பட்டமளிப்பு விழா, நேற்று (26) கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) மிக விமரிசையாக நடைபெற்றது.
'Gatehouse Awards UK' இன் இலங்கைக்கான பணிப்பாளரும், 'CCAS Campus' தலைவருமான திரு. S. நஜிமுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, 'CCAS Campus' இயக்குநரும் பதிவாளரும், 'Gatehouse Awards UK – Sri Lanka' நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான திருமதி நூர் நப்கா இலியாஸ் ஒருங்கிணைத்திருந்தார்.
இலங்கை முழுவதும் உள்ள 'Gatehouse Awards' அங்கீகாரம் பெற்ற கிளை மையங்களிலிருந்து சுமார் 25 கல்வி நிறுவனங்களின் பணிப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். ஆங்கிலம், வணிக முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம், விநியோகச் சங்கிலி முகாமைத்துவம் (Logistics & Supply Chain Management), அளவையியல் (Quantity Surveying), பொறியியல் மற்றும் கல்வியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்கள்; பட்டங்கள், டிப்ளோமாக்கள் மற்றும் உயர்தர டிப்ளோமாக்களைப் பெற்றுக்கொண்டனர்.
இவ்விழாவில் மலேசியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் (CMU) தலைவர் டத்தோ ஸ்ரீ ஜேம்ஸ் வோங், இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் கைருல் இஸ்கந்தர் முகமது யூசுப், CCAS Campus பணிப்பாளர் திருமதி நூர் நப்கா இலியாஸ் மற்றும் CCAS Campus தலைவர் S. நஜிமுதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர்.
மேலும், 'Gatehouse Awards' அங்கீகாரம் பெற்ற இலங்கையின் தனியார் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், சட்டத்தரணிகள், கல்வியாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
சர்வதேச தரச்சான்று பெற்ற கல்வி வாய்ப்புகளை இலங்கையில் விரிவுபடுத்தும் 'Gatehouse Awards UK' நிறுவனத்தின் பயணத்தில் இந்த நிகழ்வு ஒரு முக்கிய சாதனையாக அமைந்ததோடு, சர்வதேச தரத்திலான கல்வியை உள்ளூர் மாணவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதிலுள்ள அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்தியது. விழாவை வெற்றிகரமாக நடத்த உதவிய விருந்தினர்கள், பட்டதாரிகள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனப் பிரதிநிதிகள் அனைவருக்கும் S. நஜிமுதீன் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
ஞான பிரசாந்தன்









57 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
57 minute ago
2 hours ago