Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2017 ஜூலை 13 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூநகரி பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பத்தைச் சேர்ந்த 1,000 பேருக்கு, பூநகரி மகாவித்தியாலயத்தில் கடந்த 8ஆம் திகதி நடமாடும் வைத்திய சிகிச்சைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 66ஆவது படைத் தலைமையகம் இணைந்து இதனை ஒழுங்கு செய்திருந்தன.
இந்த வைத்திய சிகிச்சைகள், வைத்தியர் லக்ஷ்மன் வீரசேன உட்பட 25 வைத்தியர்களால் 3 இலட்சம் பெறுமதி வாய்ந்த மருந்து உபகரணங்களுடன் இடம்பெற்றன.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனவின் ஆலோசனைக்கு அமைய 66ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்படிவலானவின் வழிக்காட்டலின் கீழ் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன், இந்த சிகிச்சைகள் இடம்பெற்றன.
பூநகரி பிரதேசத்தின் கிராம சேவை உத்தியோகத்தர்கள், மக்கள் சுகாதார பரிசோதனை அதிகாரிகள் மற்றும் குடும்ப சுகாதார தாதியர்கள், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி, 66ஆவது படைத் தளபதி மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .