2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

பண்டாரவன்னியனின் சிலை திறப்பு...

George   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்

வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை, வியாழக்கிழமை (20) முல்லைத்தீவில் திறந்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனின் கோரிக்கைக்கு அமைய, வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களால் பயன்படுத்தப்பட்ட பீரங்கி மீட்கப்பட்ட இடத்திலிருந்து, நேர் எதிரே உள்ள இடத்தில் குறித்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிகழ்வில், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவனேசன், எம்.கே.சிவாஜிங்கம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .