Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.ரஹ்மத்துல்லா
சமூக நல்லுறவுக்கான கலை பண்பாட்டுத் திருவிழா, இன்று வியாழக்கிழமை அம்பாறை, காரைதீவுப் பிரதேசத்தில் ஆரம்பமானது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கலந்துகொண்டார்.,
இந்நிகழ்வானது நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 03 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
தேசிய ஒற்றுமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம், ஐரோப்பிய ஒன்றியம், கெயார் நிறுவனம் ஆகியவற்றின் அனுசரணையில், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இவ்விழாவின் முதலாம் நாள் விழா காரைதீவு கனகரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டாம் நாள் விழா விபுலானந்தா மத்திய கல்லூரியிலும் மூன்றாம் நாள் விழா சண்முகா வித்தியாலயத்திலும் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
40 minute ago
1 hours ago