Mayu / 2024 பெப்ரவரி 07 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றிருந்த இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சிலரை பணிநீக்கம் செய்திருந்த அமைச்சு, மேலும் சிலரை இடமாற்றம் செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியாவில் இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 20 க்கு மேற்பட்ட ஊழியர்கள் , புதன்கிழமை (07) மதிய உணவு இடைவேளையின் போது மின்சார சபைக்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கும் அரசின் திட்டத்தையும் கண்டித்தனர்.
அரசாங்கத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டதை காரணம் காட்டி இலங்கை மின்சார சபை ஊழியர்களில் 68க்கும் மேற்பட்டவர்களை பதவி நீக்கம் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்து அவர்களை மீண்டும் சேவையில் அமர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஆ.ரமேஸ்
14 minute ago
35 minute ago
41 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
35 minute ago
41 minute ago
46 minute ago