2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தானால் வழங்கப்பட்ட வீதி நூலகம் திறந்து வைப்பு

Freelancer   / 2023 ஜூலை 06 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரு நாடுகளுக்கிடையிலான  நட்புறவை மேலும் மேம்படுத்தும் வகையில் பாகிஸ்தான் மக்களின் சார்பாக  இலங்கையின் இரண்டாவது வீதி நூலகம் புதன்கிழமை (05) கண்டியில் திறந்து வைக்கப்பட்டது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் புத்தகங்கள் இந்நூலகத்தில் காணப்படும்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) உமர் பாரூக் பர்கி மற்றும் கண்டி மாநகர சபையின் ஆணையாளர் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி நூலகத்தை ஆரம்பித்ததுடன் அதனைத் தொடர்ந்து நூலக நிர்வாகத்தின் ஆவணத்தில் கையொப்பமிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X