2025 ஜூலை 24, வியாழக்கிழமை

பிரதானியுடன் ...

Editorial   / 2017 செப்டெம்பர் 22 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் - இலங்கை பாதுகாப்புப் படையினர்களுக்கான நான்காவது தடவை இடம்பெறும் பேச்சுவார்த்தை நிமித்தம், இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தான் இராணுவ உயர்மட்ட அதிகாரிகள், இலங்கை இராணுவ பதவிநிலை பிரதானியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை, இராணுவ தலைமையகத்தில், நேற்று (21) சந்தித்தனர்.

பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஹபீஸ் உர் ரஹ்மான, பிரிகேடியர் சையத் இம்ரான் அக்தர், கேணல் சஜாட் அலி போன்ற உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பாதுகாப்பு தொடர்பான முக்கியமான விடயங்களை கலந்துரையாடினர்.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு வருகை தந்த பாகிஸ்தான் இராணுவ பிரதிநிகளுக்கு இந்த வருகையையிட்டு மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தனது வாழத்துக்களை தெரிவித்தார். இறுதியில், இரு தரப்பினருக்கும் இடையில் இந்தச் சந்திப்பையிட்டு நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .