2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பிலிப்பைன்ஸ்ஸில் ஜனாதிபதி: ஐந்து வருட செயற்றிட்டத்தில் கைச்சாத்து

Editorial   / 2019 ஜனவரி 18 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸுக்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக, பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியிலுள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் இலங்கைக்குமிடையே, ஐந்து வருட செயற்றிட்டமொன்று,  இன்று (18) முற்பகல் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கையை, அரிசியில் தன்னிறைவு அடையச் செய்வதற்கான தேசியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தச் செயற்றிட்டம் கைச்சாத்திடப்பட்டதுடன், இலங்கையை அரிசியில் தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றும் இலக்கை அடைந்துகொள்வதும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்களை குறைப்பதும் இதன் நோக்கமாகும்.

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நான்கு நாள் அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (18) முற்பகல் பிலிப்பைன்ஸ் நாட்டின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் சென்ற ஜனாதிபதியை, அங்கு கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இலங்கை மாணவர்கள் இருவர் வரவேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X