2025 மே 19, திங்கட்கிழமை

பிள்ளையையும் கிள்ளி...

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆபிரிக்க நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்க முதற்பெண்மணி மெலானியா ட்ரம்ப், கானாவுக்கான விஜயத்தின் போது, அங்குள்ள வைத்தியசாலையொன்று விஜயம் மேற்கொண்டார். அப்போது, குழந்தையொன்றைத் தூக்கி வைத்திருந்து, அக்குழந்தையுடன் அவர் விளையாடுகிறார்.

இவ்விஜயத்தின் போது அவர், ஐ.அமெரிக்காவால் நிதியளிக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களிலேயே தனது கவனத்தைச் செலுத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வெளிநாடுகளுக்கான உதவிகளை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை, அவரது கணவரும் ஐ.அமெரிக்காவின் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டுவரும் நிலையில், மெலானியாவின் இவ்விஜயங்கள், பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டி விடுவது போலுள்ளன என, விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X