2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

புதிய கடற்படைத் தளபதி

Editorial   / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையின் 21ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை, இன்று (18) பெற்றுக்கொண்டார்.

1982ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைந்த ட்ரவிஸ் சின்னையா, வீர விக்ரம விபூஷ, ரணவிக்ரம, ரணசூர (மூன்று முறை) மற்றும் உத்தம சேவா ஆகிய விருதுகளைப் பெற்ற கடற்படையின் சிரேஷ்ட அதிகாரியாவார்.

புதிய கடற்படைத் தளபதியின் சேவைக் காலம் இம்மாதம் 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்யரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X