2025 மே 19, திங்கட்கிழமை

புதிய செயலாளர்கள் 12 பேர் நியமனம்

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, 12 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், அந்த 12 அமைச்சுகளுக்குமான செயலாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து, தமது நியமனக் கடிதங்களை, இன்று (30) பெற்றுக்கொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்னவும் கலந்துகொண்டார்.

இதில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக, ஜனாதிபதி பணியாட்தொகுதியின் பிரதானியாகப் பதவி வகித்த ஹேமசிறி பெர்ணான்டோ நியமிக்கப்பட்டார்.

ஹேமசிறி பெர்ணான்டோ - பாதுகாப்பு அமைச்சு

டி.எம்.ஏ.ஆர்.பி.திசாநாயக்க - மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்

ஆர்.பீ.ஆரியசிங்க - வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

எல்.பீ.ஜயம்பதி - துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு

கே.டி.எஸ்.ருவன்சந்ர - விவசாய அமைச்சு

கலாநிதி பி.எம்.எஸ்.படகொட - மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சு

பத்மசிறி ஜயமான்ன - கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு

எச்.டி.கமல் பத்மசிறி - மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு

வீ.சிவஞானசோதி - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு

எம்.எம்.பீ.கே.மாயாதுன்ன - மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அமைச்சு

எஸ்.எம்.மொஹமட் - மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு

எஸ்.ஹெட்டியாரச்சி - சுற்றுலாத் துறை மற்றும் வனசீவராசிகள் அமைச்சு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X