Janu / 2024 ஜனவரி 28 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு – தி ஒன் ரிஹாப் அண்ட் ஹெல்த்கேர், எங்களின் சமீபத்திய முயற்சியான 'புனர்வாழ்வு இல்லம்' தொடங்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். எங்களின் பெரும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகத்தினரினருக்கு இவ்வகை சேவை மிகவும் அவசியம் மற்றும் தேவை தொடர்பில் அறிந்ததால் இந்த அற்புதமான சேவையை நன்கு திட்டமிட்டு ஆரம்பித்துள்ளோம்.
அன்றாட இயல்பான செயல்பாட்டு சவால்களை அனுபவிக்கும் தனிநபர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சேவை இலங்கையில் முதல்தடவையாக Rehab Home என்ற பெயரில் தனித்துவமான மற்றும் விரிவான தீர்வை வழங்குகிறது.
எங்களின் இடைநிலை மறுவாழ்வு பராமரிப்பு என்பது, ஒரு பிரத்தியேக மறுவாழ்வுக் குழுவால் வழங்கப்படும் குறுகிய கால, வார்டு அடிப்படையிலான சேவையாகும். வைத்தியர்கள் , உளவியலாளர்கள், இயன்முறை வைத்தியர்கள், தொழில்சார் சிகிச்சையாளர்கள், பேச்சு சிகிச்சையாளர்கள், நடத்தை சிகிச்சையாளர்கள் மற்றும் கல்வி சிகிச்சையாளர்கள் போன்ற அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்ட இந்தக் குழு, நோயாளர்களின் அதிகபட்ச தனித்தியங்கும் செயல்பாட்டுத் திறனை அடைய உதவுவதில் உறுதியாக உள்ளது.
651/31B, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05 இல் அமைந்துள்ள Rehab Home குறுகிய கால இடைநிலை பராமரிப்பு மற்றும் நீண்ட கால முதியோர் பராமரிப்புக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து சமீபத்தில் வெளியேறிய நோயாளர்கள், அன்றாட செயல்பாட்டுச் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள், கோவிட் தொற்றுக்குப் பின் மறுவாழ்வு தேவைப்படும் நபர்கள் மற்றும் நீண்ட கால பராமரிப்பு தேவைப்படும் முதியவர்கள் உட்பட பலதரப்பட்ட நபர்களுக்கு இடமளிக்கும் வகையில் எங்கள் சேவை கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை மூலம் யார் பயனடைவார்கள்?
- சமநிலையை மேம்படுத்தவும் வீழ்ச்சியைத் தடுக்கவும் முதியோர் மறுவாழ்வு தேவைப்படும் நபர்கள்
- நீண்ட காலம் தங்கி எங்களின் கவனிப்பை விரும்பும் முதியவர்கள் நோய் பாதிப்புடையவர்களுக்கு மறுவாழ்வு இல்லத்தில் வழங்கப்படும் வசதிகள்:
Rehab Home "புனர்வாழ்வு இல்லத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் விரிவான மறுவாழ்வு சிகிச்சையை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வசதி. அதிகபட்ச தன்னிச்சையான செயற்பாட்டை மீண்டும் பெறுவதற்கான தனிநபர்களின் பயணத்திற்கு ஆதரவளிக்க எங்கள் குழு தயாராகவுள்ளது, என்று தி ஒன் ரீஹாப் மற்றும் ஹெல்த்கேர் நிறுவனத்தின் முன்னணி பிசியோதெரபிஸ்ட் மற்றும் இயக்குனரான துஷ்யந்தன் செல்வராஜா இந்த சேவை தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தகவலுக்கு சப்ராஸ் 0778527274 இல் தொடர்பு கொள்ளவும்.


10 minute ago
21 minute ago
28 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
28 minute ago
47 minute ago