Mayu / 2026 ஏப்ரல் 21 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக நன்மைக்காக வேண்டி, 'சித்தர்களின் குரல்' அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித கபில்வன முருகன் ஆலய யாத்திரையும், வன பூஜையும் பக்தி பூர்வமாக நடைபெற்று முடிந்தன.
மொனராகலை மாவட்டத்தின் பெருங்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள புனித கபில்வத்தை முருகன் ஆலயத்திற்கான பக்தர்களின் வருடாந்த புனித யாத்திரை, கடந்த வெள்ளிக்கிழமை (17.04.2026) ஆரம்பமாகி நேற்று ஞாயிற்றுக்கிழமை (19.04.2026) இரவுடன் நிறைவுபெற்றது.

குமுக்கன் ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ள இப்புனித தலம், 'கற்பக விருட்சம்' என அழைக்கப்படும் புனித புளிய மரம் ஒன்றைச் சூழ அமைந்துள்ளது. முருகப்பெருமான் தவம் செய்த இடமாகவும், ரிஷிகளும் முனிவர்களும் யோகத்தில் ஈடுபட்ட இடமாகவும் கருதப்படும் இப்பகுதி, பல வரலாற்று இதிகாச புராணங்களுடனும், மகாவம்சத்துடனும் தொடர்புடையதாக நம்பப்படுகிறது.

இப்புனிதப் பயணத்தின் போது, சித்தர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் உலக நன்மைக்காக விசேட யாகங்கள், சித்த யாகம், நாத ஒலியில் முருக வழிபாடு, சத்ரு சங்கார யாகம், வேல் பூஜை மற்றும் கபில வன பூஜை என்பன பக்தி பரவசத்துடன் நடைபெற்றன.

பக்தர்கள் 21 நாட்கள் விரதமிருந்து இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொண்டனர். இவ்வாலய வழிபாடுகளில் தமிழ் மக்களுடன் இணைந்து சிங்கள மக்களும் பெருமளவில் கலந்துகொண்டு இனநல்லுறவைப் பேணி வருகின்றமை ஒரு சிறப்பம்சமாகும்.






வ.சக்திவேல்
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago