Kogilavani / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
நுவரெலியா இந்து கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில், புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு, நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்தியக் கல்லூரியில், நேற்று (10) நடைபெற்றது.
பேரவையின் தலைவரும் நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான இரா.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 35 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டு பல்கலைக்கழகங்களில் கல்விக் கற்கும் வரிய குடும்பங்களைச் சேர்ந்த 35 மாணவர், மாணவியருக்கே புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஒருவருடத்துக்கான கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
இந்நிகழ்வில், பேரவையின் காப்பாளர்களான நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் எல்.நேருஜி, பி.மகேஸ்வரன், டி.இராஜேந்திரன், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ஆர்.குணசேகரன், கல்விச்செயலாளர் ஆசிரியர் ஏ.வி.இராஜேந்திரன், கலாசார செயலாளர் எம்.செல்லையா உட்பட நிர்வாக. சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.








40 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
9 hours ago
02 May 2026