2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பெற்றோலுக்கு முண்டியடிப்பு…

Editorial   / 2017 நவம்பர் 07 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கடந்த வௌ்ளிக்கிழமை முதல் எற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக திருகோணமலை நகரில் இரவு - பகலாக எரிப்பொருள் நிரப்பு நிலையங்களில் போத்தல்களுடனும் வாகனங்களுடனும் நீண்ட வரிசையில் பெற்றோலைப் பெறுவதற்காகப் பொதுமக்கள் முண்டியடிக்கின்றனர்.

இதேவேளை, மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு 100 ரூபாய்க்கும் முச்சக்கர வண்டிக்கு 300 ரூபாய்க்கும் என மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெற்றோல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், திருகோணமலை நகரிலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 'பெற்றோல் இல்லை' என்ற அறிவிப்புப் பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த நிலையங்களும் வெறிச்சோடிப்போய்க் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(படங்கள்: ஒலுமுதீன் கியாஸ், தீஷான் அஹமட், வடமலை ராஜ்குமார், அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X