2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பொங்கி எழுந்த புதுமை பெண்கள்…

Editorial   / 2023 மார்ச் 12 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

"வெட்கம் கொண்டு விலகி செல்லாதே வீரம் கொண்டு வேர்த்து போக வை" எனும் தொனிப்பொருளில் இராகலை நகரில்  சென்லெணாட்ஸ் தோட்ட புலமைபெண்கள் அமைப்பு எதிர்ப்பு பேரணியொன்றை ஞாயிற்று கிழமை (12) மதியம் நடத்தியது.

கண்டி சமூக அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில் உலக மகளிர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட இந்த எதிர்ப்பு பேரணி சென்லெணாட்ஸ் தோட்ட கைகாட்டி சந்தியில் 12 மணியலவில் ஆரம்பிக்கப்பட்டு இராகலை நகரின் எரிபொருள் நிரப்பு நிலையம் வரை வருகை தந்து அங்கு ஒன்றுக்கூடல் இடம்பெற்றது.

“வேலைத்தள வன்முறை,மற்றும் பாலியல் சீண்டல் எதிராக சமமாய 190 சட்டத்தை தேசிய சட்டமாக அங்கீகரிக்கவும்”.

“நாட்டின் பொருளாதாரத்திற்கு இரண்டு தசாப்த காலமாக உழைக்கும் தோட்டத் தொழிலாளர்களின் மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை வழங்கு”.

“தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டுரிமை,நில உரிமையை வழங்கு”. 

“தோட்ட வைத்தியசாலைகளை தேசிய மயமாக்கி அடிப்படை சுகாதார வசதியை வழங்கு”. 

“நாட்டின் பொருளாதார பின்னடைவால் சிக்கி தவிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை முன் கொண்டு செல்ல சம்பள உயர்வை வழங்கு”.

“பொருளாதார நெருக்கடியில் அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடு”.

“பொருட்களின்  விலையேற்றம் தொழிலுக்கேற்ற ஊதியம் கிடைக்காத நிலையில் கல்வி மற்றும் இடைவிலகளில் பாதிக்கப்பட்டுள்ள தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன”? உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

மேலும் இந்த நாட்டில் உழைக்கும் வர்க்கமான தோட்டத் தொழிலாளர் பெண்களின் அடிப்படை உரிமைகளை வழங்க அரசு திட்டம் ஒன்றை உருவாக்கி தீர்வு தரும் வரை உலக மகளிர் தினத்தையொட்டிய இம்மாதம் பூராவும் எதிர்ப்பு நடவடிக்கையை கைவிடப்போவதில்லை எனவும் பேரணியில் கலந்து கொண்ட பெண்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆ.ரமேஸ்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .