Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதி, செனன் பகுதியில், இன்று (17) காலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த அவ்வீதி வழியானப் போக்குவரத்து, சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், வழமைக்குத் திரும்பியதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி வீதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ஹட்டன் -கொழும்பு., ஹட்டன்- கண்டி பகுதிகளுக்கான போக்குவரத்து, இரண்டு மணித்தியாலங்கள் வரை தடைப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, வாகன சாரதிகள், நோட்டன் தியகல வழிப் பாதையை தற்காலிமாகப் பயன்படுத்தினர்.
இந்நிலையில், ஹட்டன் பொலிஸாரும் ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் வீதி அபிவிருத்தி ஊழியர்களும் இணைந்து, வீதியில் குவிந்திருந்த மண்ணை அப்புறப்படுத்தினர்.
இதன் பின்னர் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago