2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

முன்மாதிரி...

Kogilavani   / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை, கவரவெல மஹா வித்தியாலய மாணவர்கள், பதுளை ரிதிபான முதியோர் இல்லத்திலுள்ள வயோதிபர்களை கண்காணிக்கும் பணியை, நேற்று முன்னெடுத்தனர்.

இப்பாடசாலையில் தரம் 8 இல் கல்விப் பயின்று வரும் மாணவர்களே, பாடசாலை அதிபரின் வழிகாட்டலின் கீழ், இச்செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர். இவர்களுடன் பாடசாலையின் ஆசிரியர் குழாமும் இணைந்திருந்தது.

நேற்றுக் காலை முதியோர் இல்லத்துக்கு வந்த மாணவர்கள், அங்கிருந்த வயோதிபர்களுக்கு உணவளித்ததுடன், வயோதிபர்களின் சுகாதார விடயங்களிலும் கவனம் செலுத்தினர்.

இதேவேளை, வயோதிபர் இல்லத்தில் சிரமதான பணியையும் முன்னெடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .