2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

மீரியபெத்தை மண்சரிவு: இரண்டாம் ஆண்டு நினைவு தினம்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 30 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

கொஸ்லந்தை மீரிபெத்த மண்சரிவில் உயிர்நீர்த்த மலையக சொந்தங்களை நினைவுகூறும் இரண்டாம் ஆண்டு நினைவுதின நிகழ்வு, ஹட்டனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது.

பதுளை கொஸ்லந்தை மீரியபெத்த பகுதியில், கடந்த 2014.10.29ஆம் திகதி காலை 7.45 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி  37  பேர் உயிரிழந்ததுடன் பலர் நிர்க்கதிக்கு உள்ளாகினர்.

இப்பேரவலம் இடம்பெற்று சனிக்கிழமை (29)யுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு   மலையக சிவில் அமைப்புக்கள் மேற்படி நினைவு தினத்தை ஒழுங்கு செய்திருந்தன.

இதன் ஒருக்கட்டமாக,  ஹட்டன் டிக்கோயா நகரசபையிலிருந்து  ஹட்டன் மணிக்கூட்;டு சந்திவரை பேரணி நடைபெற்றதுடன்  மக்கள் மெழுகுவர்த்தியை ஏந்தியவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.

மீரியபெத்தை மக்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். பாதுகாப்பான நிலப்பிரதேத்தில் மலையக மக்களுக்கு வீடமைப்புத்திட்டம் , காணி உரிமை உட்பட 9 அம்ச கோரிக்கைளுடன் தயாரிக்கப்பட்டுள்ள  மகஜரை,   ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கையளிக்கவுள்ளதாக சிவில் அமைப்புக் குழுவினர் இதன்போது கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .