2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

மட்டக்களப்பில் கிளீன் ஸ்ரீலங்கா…

Editorial   / 2025 ஜனவரி 12 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்  

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின்   தூய்மையான இலங்கை (கிளீன் ஸ்ரீலங்கா)  வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகமாக மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கைதிகளால் சிரமதான நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என். பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம ஜெயிலர் உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சிறை கைதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் 

மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் என்பன இயற்கை பூரண ஒத்துழைப்பை நல்கி இருந்தன. 

சிறைச்சாலை சுற்றாடல்,ஆனைப்பந்தி முருகன் கோவில் பிரதேசம், ஆஸ்பத்திரி வீதி உட்பட பல பகுதிகள் இதன் மூலம் தூய்மையாக்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X