2025 மே 08, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு

Freelancer   / 2023 மே 14 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் பொது மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டுவரும் பூங்காக்களை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் மாநகர சபையின் விசேட செயற்திட்டதிற்கு அமைவாகவும், தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு  அமைவாகவும்மாநகர ஆணையாளரின் பணிப்புரையின் கீழ் மாநகர சபையின் சுகாதார பிரிவினரால் பிரதி  சனிக்கிழமை தோறும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக இன்று (13) மட்டக்களப்பு நகரின் கோட்டை பூங்கா வளாகம், புலவர்மணி . பெரியதம்பிப்பிள்ளை பூங்கா என்பன சுத்தப்படுத்தப்பட்டதுடன் மட்/ அரசினர் ஆசிரியர் கலாசாலையினை ஊடறுத்து செல்லும் கோட்டைமுனை பிரதான வடிகானும், இதன்போது தூர்வாரப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X