2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

மனிதநேயம்...

Kogilavani   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில், கினிகத்தேனை நகரிலிருந்து, இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்ட வயோதிபரை, ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவ் வயோதிபர்  ஒரு மாதத்துக்கு முன்பு, கினிகத்தேனை பஸ் தரிப்பிடத்தை தஞ்சம்மடைந்துள்ளதுடன் பயணிகள் வழங்கும் உணவுகளை உட்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். பஸ் தரிப்பிடத்தில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்த அவரை பொலிஸார் மீட்டு, சிகையலங்காரம் செய்துள்ளதுடன் வைத்தியசாலையில் அனுமதித்து அவரது உடல்நிலையை பரிசோதித்துமுள்ளனர்.

இந்நிலையில், முதியவரை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .