Editorial / 2023 மே 03 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று (3) புதன்கிழமை காலை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது. மேலும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு, பல வீடுகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் மன்னார் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மன்னார் நகர சபை பகுதியில், மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வந்த கழிவு நீர் வடிகான் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது மந்த கதியில் இடம் பெற்று வருவதன் காரணத்தினால் வீதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீர் வடிந்தோட முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். றொசேரியன் லெம்பட்







2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago