Editorial / 2021 ஏப்ரல் 21 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று இன்று ஏப்ரல் 21 ஆம் திகதி 2 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் குறித்த தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக மன்னாரில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இன்று புதன் கிழமை(21) காலை 5.45 மணியளவில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் அந்தத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இதன் போது ஏப்ரல் 21 இடம் பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக இறைபிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு,மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில், பாடசாலை மாணவர்கள் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதோடு, கத்தோழிக்க தேவாலயங்களுக்கு இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து விசேட பாதூகாப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









46 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026