2025 மே 24, சனிக்கிழமை

மயிரிழையில் தப்பினர்...

Gavitha   / 2017 மார்ச் 04 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கடவத்தை பகுதியில், பிரபல நிதிநிறுவனமொன்றுக்குச் சொந்தமான, வாகனங்கள் சேமித்து வைக்கும் களஞ்சிய சாலைக்குள், நேற்று மாலை (03) கன்டர் ரக வாகனமொன்று புகுந்ததில், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மயிரிழையில் உயிர் பிழைத்தனர்.

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கன்டர் ரக வாகனம், எதிரே வந்த கார் ஒன்றுடன் மோதி, கட்டுப்பாட்டை இழந்து, வாகனம் சேமித்து வைக்கும் இடத்துக்குள் நுழைந்ததில், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் இருவரது முச்சக்கரவண்டிகள் முற்றாக சேதமடைந்தன.

விபத்துக்குள்ளான கார், முழுமையாக சேதமடைந்திருந்த போதிலும், காரைச் செலுத்த வந்த சாரதி, எந்தவொரு பாதிப்பும் இன்றி உயிர்தப்பியுள்ளார்.

குறித்த வாகன சேமிக்கும் இடத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அநேகமான நேரங்களில்  அமர்ந்து இளைப்பாறும் இடத்துக்குள்ளேயே, கன்டர் ரக வாகனம் புகுந்துள்ளது. எனினும், சம்பவ நேரத்தின் போது, எந்தவொரு ஊழியரும் அந்த இடத்தில் இருக்கவில்லை என்று, வாகன சேமிப்பு சாலையின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை, கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X