2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மரத்திலேறி ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2016 ஜூலை 07 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, நாமல்வத்தை விஜயமங்களராமய விகாரையின் சொத்துக்களைக் கல்யென் ரஜமஹா விகாரையின் விகாராதிபதியிடமிருந்து மீட்டுத் தருமாறு கோரி, நபரொருவர், நேற்று புதன்கிழமை மாலை (06) நாமல்வத்தைப் பகுதியில் மரத்தில் ஏறி போராட்டத்தை ஆரம்பித்தார்.

எனினும், பொலிஸாரின் தலையீட்டையடுத்து சிலமணி நேரத்தில் அவர் தரையிறக்கப்பட்டார்.

சேருவில விகாரையின் விகாராதிபதியின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்த இந்த விகாரை, 2007ஆம் ஆண்டு நாமல்வத்தைக்கு அருகிலுள்ள  மொறவெவ கல்யென ரஜமஹா விகாரையின் விகாராதிபதிக்கு அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு: பதுர்தீன் சியானா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .