2025 மே 21, புதன்கிழமை

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு

Editorial   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு கொட்டகலை சித்தி விநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நேற்று(16) இடம்பெற்றது.

கொட்டகலை ரொசிட்டா சந்தியில் இருந்து மலையக கலை கலாச்சார நிகழ்வுகளுடன் ஊர்வலம் ஆரம்பமாகி, பிரதான மண்டபத்தை வந்தடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்த மாநாடு, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர்அலி, நாடாளுமன்ற உறுப்பினரும்  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான  அனுரகுமார திசாநாயக்க, மலையக மக்கள் முன்னனியின் அரசியல்துறை தலைவரும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.அரவிந்தகுமார், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டகளப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன்,  மத்திய மாகாண உறுப்பினர் ஆர். ராஜாராம் மலேசிய நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் மணிவன்னண் கோவின், நகரான்மை உறுப்பினர் மணிவன்னண் வேலு, வட கொரியா நாட்டின் இளைஞர்கள் வட கொரிய நாட்டின் இளைஞர் அமைப்பின் அதிகாரிகள் உட்பட மலையக மக்கள் முன்னணியின் செயலாளர்கள்¸ உப தலைவர்கள்¸ அமைப்பாளர்கள்¸ உயர்மட்ட அதிகாரிகள்¸ அங்கத்தினர்¸ இளைஞர்கள் கலந்துக் கொண்டார்கள் (படப்பிடிப்பு - மு.இராமச்சந்திரன் )

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .