2025 ஜூலை 23, புதன்கிழமை

மூதூரில் சிறுவர் தினம்…

Editorial   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக சிறுவர் தினம், மூதூர் பொலிஸ் நிலைய வளாகத்தில் நேற்று (02) மாலை இடம்பெற்றது.

இதன் போது, மூதூர் ஆணைச்சேனை, மல்லிகைத்தீவு ஆகிய சிறுவர் இல்லங்களைச் சேர்ந்த, மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு அவர்களுக்கு பொலிஸார் இனிப்பு பண்டங்கள் வழங்கி மகிழ்வித்ததோடு, அம் மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்தச் சிறுவர் தின நிகழ்வில், மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசூப், மூதூர் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனத்துங்க, மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதி காரிநந்தலால் பத்மநாத, திருகோணமலை மாவட்ட மகளீர் சிறுவர் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெஸ்மீன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். (படப்பிடிப்பு - தீஷான் அஹமட்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .