2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

யாழில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

George   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி..பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளர் கங்கையமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்தை சனிக்கிழமை வந்தடைந்தனர்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இருவருக்கும் பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்புடன் இருவரும் யாழ். நகரை சுற்றி பார்வையிட்டனர்.

இதன்போது பாடகர் எஸ்.பி.பி.பாலசுப்பிரமணியம், 'இலங்கையில் எனக்கு அதிகமாக ரசிகர்கள் உள்ளனர். அவர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி' என தெரிவித்தார்.

இன்று இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சிக்காக இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X