2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

யாழ்.போராட்டத்துக்கு ஆதரவாக ஊர்திப் பவனி

Editorial   / 2025 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்


சர்வதேச நீதி கோரி யாழில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவாக ஊர்திப் பவனி ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான, சனிக்கிழமை (30) வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கிலும் கிழக்கிலும் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

 வடக்கில் யாழ்ப்பாணம் செம்மணியில் இப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் யாழிலிருந்து ஊர்திப் பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபியில் அஞ்சலி செலுத்தி அங்கிருந்து இந்த ஊர்திப் பவனி ஆரம்பமாகியது. 

இவ் ஊர்திப் பவனி பல்வேறு இடங்களுக்கும் சென்று  போராட்டம் நடைபெறும் செம்மணியை சனிக்கிழமை (29) காலை வந்தடையும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .