Editorial / 2017 செப்டெம்பர் 01 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

இரத்தினக்கல் கைத்தொழிற்றுறையில் ஈடுபட்டுள்ள சுரங்கத் தொழிலாளர்கள், இரத்தினக்கல் வடிவமைப்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களின் நலன்புரி செயற்பாடுகளுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள “ரத்னாபிமானி” ஆயுள் காப்புறுதி மற்றும் ஓய்வூதிய திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தலைமையில், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (31) பிற்பகல் நடைபெற்றது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
ஆயுள் காப்புறுதி மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்த ஜனாதிபதி, அதன் பயனாளிகள் பத்து பேருக்கு ஒப்பந்தப் படிவங்களை வழங்கி வைத்தார்.
ஆயுள் காப்புறுதி மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்குவதற்கு பங்களிப்பு வழங்கிய வளவாளர்கள் ஆறு பேருக்கான பாராட்டுச் சான்றிதழ்களும் ஜனாதிபதியால் இதன்போது வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து இடம்பெற்ற இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சியையும் ஜனாதிபதி பார்வையிட்டதுடன், இரத்தினக்கற்களை பரிசோதிக்கும் நடமாடும் சேவை வாகனத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரனவிதான, இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையின் தலைவர் கலாநிதி கித்சிறி திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் நிகழ்வில் பங்குபற்றினர்.



5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago