2025 மே 23, வெள்ளிக்கிழமை

லொறி குடைசாய்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு

Kogilavani   / 2017 ஜூலை 11 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

 

டயகமையிலிருந்து கொழும்புக்கு, இருப்பத்து ஆறாயிரத்து 730 கிலோகிராம் தேயிலைத்தூளை ஏற்றிச் சென்ற கனரக லொறி, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி,  வுட்லேன்ட் பகுதியில், இன்று அதிகாலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், அவ்வீதி வழியான போக்குவரத்து சுமார் 6 மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்ததாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவ்விபத்தினால், எவருக்கும் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார், லொறி சாரதியின் கட்டுப்பாட்டை மீறி, லொறி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்தனர்.

இதனால், நோட்டன் பிரிட்ஜ் வழியாகவே, போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டதாகவும் இன்றுக் காலை 8 மணியளவிலேயே, லொறி அப்புறப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தினால், பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தமையால், அரச ஊழியர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும், பல சிரமங்களுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X