Princiya Dixci / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியில் பயணித்த லொறியும் காரும், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (06) மாலை, நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளதாகப் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த இளைஞர்கள் இருவரும், புத்தளம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
புத்தளம், ரத்மல்கஸ்யாயப் பகுதியைச் சேர்ந்த சஜித் மதுசான் (வயது 23) தினேஷ் (வயது 25) என்ற இளைஞர்களே பலியாகியுள்ளதுடன், லொறியின் சாரதியைக் கைதுசெய்துள்ள புத்தளம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (படப்பிடிப்பு: ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)



20 minute ago
32 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
32 minute ago
36 minute ago