2025 மே 29, வியாழக்கிழமை

விபத்தில் மூவர் பலி

George   / 2016 ஜூன் 15 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர

முந்தல், கியன்கல்லி பகுதியில், சிறியரக லொறியொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மூவர் உயிரிழந்ததுடன், படுகாயமடைந்த ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை(15) மாலை இடம்பெற்ற விபத்தில், முந்தல், மதுரங்குளி கனமுல்ல பகுதியைச் சேர்ந்த, ரஹிம் மொஹமட் ரசாம் ( வயது 22), நௌபர் மொஹமட் சாஜித் (வயது 22) மொஹமட் முஹமது மவுஜீன் (வயது 37) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த மூவரும் படுகாயமடைந்த நபரும், நீர்கொழும்பிலிருந்து முச்சக்கரவண்டியில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, முந்தல் பகுதியில் வைத்து சிறிய ரக லொறியுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

\


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X