2025 மே 24, சனிக்கிழமை

விழிப்புணர்வு…

Princiya Dixci   / 2017 மார்ச் 02 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு பாத யாத்திரை, புத்தளம் மாவட்ட செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தலைமையில், புத்தளம் நகரில் நேற்று (01) இடம்பெற்றது.

பெண்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் வகையில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு பாதயாத்திரையானது, கடன் பிரச்சினை, வீட்டு வன்முறை, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் வன்முறைகள் என்பவற்றுக்கு எதிராக  ஒழுங்கு  செய்யப்பட்டிருந்தது.

அபிவிருத்தித் திட்டங்களினூடாக பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றங்களை பிரதிபலிப்பதாகவும், பெண்கள் சமூகத்தில் அடைய வேண்டிய இலக்குகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென, இதன்போது வலியுறுத்தப்பட்டது.

(படப்பிடிப்பு: முஹம்மது முஸப்பிர்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X