2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

விழிப்புணர்வு பேரணி

Kogilavani   / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லதம்பி நித்தியானந்தன்

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்குப்பட்ட வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில், 'மாற்றுத் திறனாளிகளை புறக்கணித்து வருகின்ற சமூக செயற்பாடுகளுக்கு எதிராக தம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்பதை வலியுறுத்திய விழிப்புணர்வுப் பேரணி, இன்று (23) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகள் பங்கு கொண்ட விழிப்புணர்வு பேரணி, வாழைச்சேனை கோறளைப் பற்று பிரதேச செயலகத்திலிருந்து ஆரம்பமாகி, பிரதான வீதிவழியாகச் சென்று துறைமுகச் சந்தியில் நிறைவடைந்தது.

வாழைச்சேனை முச்சக்கர வண்டிகள் சங்கம் பேரணியில் கலந்துகொண்டதுடன், பேரணியில் கலந்துகொள்ள முடியாமல் இருந்த மாற்றுத் திறனாளிகளுக்கு, தங்களின் சங்கத்தினால் ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.
 
நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியைத் தொடர்ந்து,  பேத்தாளை குகநேசன் மண்டபத்தில் மற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X