2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண சபையில் அஞ்சலி

George   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

காலமான, வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெகநாதனுக்கு வடமாகாண சபையில் இன்று  வியாழக்கிழமை (06)  அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1 ஆம் திகதி முள்ளியவளைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் போது, மாரடைப்பு ஏற்பட்டு கீழே வீழ்ந்து எம்.அன்டனி ஜெகநாதன் உயிரிழந்திரு்தார்.

அவருடைய இறுதிக் கிரியைகள்  இன்று வியாழக்கிழமை (06) நடைபெறவுள்ள நிலையில், வடமாகாண சபையின் மாதாந்த அமர்வும் இடம்பெற்றது.

இதன்போது, வடமாகாண சபையின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், துக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக கறுப்புக்கொடியும் கட்டப்பட்டது.

அவருக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு ஆரம்பகமாகியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X