2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

வடமாகாணத்தில் புதிய அமைச்சர்கள் நியமனம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்தின்  புதிய அமைச்சர்கள்,  வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து, ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் இன்று( 23) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

நிதி மற்றும் திட்டமிடல்,சட்டம் மற்றும் ஒழுங்கு காணி, மின்சாரம், வீடமைப்பு மற்றும் புனரமைப்பு, சுற்றுலா, உள்ளுராட்சி, மாகாண நிர்வாகம், வீதி அபிவிருத்தி, ​மோட்டார் போக்குவரத்து அமைச்சராக வடமாகாண முதலமைச்சர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வடமாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, சமூகசேவைகள்,கூட்டுறவு, வர்த்தக அபிவிருத்தி அமைச்சராக அனந்தி சசிதரனும், வடமாகாண சுகாதார சுகாதார அமைச்சராக குணசீலனும், வடமாகாண விவசாய மற்றும் கடற்றொழில் நீரியல்வள அமைச்சராக கந்தையா சிவநேசனும் தமது அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X