Editorial / 2019 ஜூலை 12 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}



வத்தளை அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலையில் புதிதாகக் கட்டப்படவுள்ள நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் தேசிய பாடசாலையென உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்வும், இன்று (12) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
வத்தளையில் முதன் முறையாக தமிழ் பாடசாலையொன்று, தேசியப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .